வினைவலியும் தன்வலியும் மாற்றான் – குறள்: 471

Thiruvalluvar

வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்.
– குறள்: 471

அதிகாரம்: வலி அறிதல், பால்: பொருள்கலைஞர் உரை

செயலின் வலிமை, தனது வலிமை, பகைவரின் வலிமை, இருசாராருக்கும் துணையாக இருப்போரின் வலிமை ஆகியவற்றை ஆராய்ந்தறிந்தே அந்தச் செயலில் ஈடுபட வேண்டும்.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

தான் செய்யத்துணிந்த வினைவலியையும் ;அதைச் செய்தற்கிருக்கும் தன் வலியையும் ; அதை எதிர்க்க வரும் பகைவன் வலியையும் ; இருவர்க்குந் துணையாக வருவார் வலியையும் ; ஆராய்ந்து பார்த்துத் தன்வலி மிகுமாயின் அவ்வினையைச் செய்க .மு. வரதராசனார் உரை

செயலின் வலிமையும், தன் வலிமையும், பகைவனுடைய வலிமையும், இருவர்க்கும் துணையானவரின் வலிமையும் ஆராய்ந்து செய்யவேண்டும்.G.U. Pope’s Translation

The force the strife demands, the force he owns, the force of foes, The force of friends; these should he weigh ere to the war he goes.

 – Thirukkural: 471,The Knowledge of Power, WealthBe the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.