வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் – குறள்: 1001

Thiruvalluvar

வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுஉண்ணான்
செத்தான் செயக்கிடந்தது இல்.
குறள்: 1001

– அதிகாரம்: நன்றியில் செல்வம், பால்: பொருள்கலைஞர் உரை

அடங்காத ஆசையினால் வீடு கொள்ளாத அளவுக்குச் செல்வத்தைச்
சேர்த்து வைத்து அதனை அனுபவிக்காமல் செத்துப்போகிறவனுக்கு.
அப்படிச் சேர்க்கப்பட்ட செல்வத்தினால் என்ன பயன்?ஞா. தேவநேயப் பாவாணர் உரை

தன் மனையிட மெல்லாம் நிறைதற்கேதுவான பெருஞ்செல்வத்தை ஈட்டிவைத்தும் ,கஞ்சத்தனத்தால் அதை நுகராதவன் , செத்தான் உடம்போ டுளனாயினும் செத்தவனாவன்; அதைக்கொண்டு அவன் செய்யக் கிடந்ததொரு செயலுமில்லை.மு. வரதராசனார் உரை

ஒருவன் இடமெல்லாம் நிறைந்த பெரும் பொருளைச் சேர்த்து வைத்து அதை உண்டு நுகராமல் இறந்துபோனால் அவன் அந்தப் பொருளால் செய்ய முடிந்தது ஒன்றுமில்லைG.U. Pope’s Translation

Who fills his house with ample store, enjoying none.
Is dead, Nought with the useless heap is done.

 – Thirukkural: 1001, Wealth without Benefaction, WealthBe the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.