நகல்வல்லர் அல்லார்க்கு மாஇரு – குறள்: 999

Thiruvalluvar

நகல்வல்லர் அல்லார்க்கு மாஇரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இருள்.
– குறள்: 999

– அதிகாரம்: பண்புடைமை, பால்: பொருள்கலைஞர் உரை

நண்பர்களுடன் பழகி மகிழத் தெரியாதவர்களுக்கு உலகம் என்பது
பகலில் கூட இருட்டாகத்தான் இருக்கும்.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

பண்பின்மையால் ஒருவரோடுங் கலந்துரையாடி மகிழுந் திறமில்லாதவர்க்கு; மிகப்பெரிய இவ்வுலகம் பட்டப் பகலிலும் இருள் நிறைந்திருப்பதாகும்.மு. வரதராசனார் உரை

பிறரோடு கலந்து பழகி மகிழ முடியதவர்க்கு, மிகப் பெரிய இந்த உலகம் ஒளியுள்ள பகற் காலத்திலும் இருளில் கிடப்பதாம்.G.U. Pope’s Translation

To him who knows how to smile in kindly mirth, Darkness in daytime broods o’er all the vast and mighty earth.

 – Thirukkural: 999, Perfectness, WealthBe the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.