உயிர்ப்ப உளர்அல்லர் மன்ற – குறள்: 880

Thiruvalluvar

உயிர்ப்ப உளர்அல்லர் மன்ற செயிர்ப்பவர்
செம்மல் சிதைக்கலா தார்.
குறள்: 880

– அதிகாரம்: பகைத்திறம் தெரிதல், பால்: பொருள்.



கலைஞர் உரை

பகைவரின் ஆணவத்தைக் குலைக்க முடியாதவர்கள், சுவாசிக்கிற
காரணத்தினாலேயே, உயிரோடிருப்பதாக நிச்சயமாகச் சொல்ல முடியாது.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

தம்மைப் பகைப்பவரின் செருக்கை அடக்கும் நிலைமை யிருந்தும் இகழ்ச்சியால் அதைச் செய்யாது விட்டுவிட்டவர்; பின்பு, உறுதியாக மூச்சுவிடும் அளவிற்கும் உயிர் வாழ்பவராகார்.



மு. வரதராசனார் உரை

பகைத்தவருடைய தலைமையைக் கெடுக்க முடியாதவர் திண்ணமாக மூச்சுவிடும் அளவிற்கு உயிரோடு வாழ்கின்றவர் அல்லர்.



G.U. Pope’s Translation

But breathe upon them, an they surely die,
Who fail to tame the pride of angry enemy.

Thirukkural: 880, Knowing the Quality of Hate, Wealth.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.