தாள்ஆற்றித் தந்த பொருள்எல்லாம் – குறள்: 212

Thiruvalluvar

தாள்ஆற்றித் தந்த பொருள்எல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு.

– குறள்: 212

– அதிகாரம்: ஒப்புரவு அறிதல், பால்: அறம்கலைஞர் உரை

தகுதியுடையோர் நலனுக்கு உதவிடும் பொருட்டே ஒருவன் முயன்று திரட்டிய பொருள் பயன்பட வேண்டும்.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

ஒப்புரவாளன் முயற்சி செய்து தொகுத்த செல்வம் முழுதும்; தகுதியுடையார்க்குப் பல்வகையிலும் உதவி செய்தற் பொருட்டேயாம்.மு. வரதராசனார் உரை

ஒப்புரவாளன் தன்னால் இயன்ற முயற்சி செய்து சேர்த்த பொருள் எல்லாம் தக்கவர்க்கு உதவி செய்வதற்கே ஆகும்.G.U. Pope’s Translation

The worthy say, when wealth rewards their toil-spent hours, For uses of beneficence alone ’tis ours.

Thirukkural: 212, The Knowledge of What is Befitting a Man’s Position, VirtuesBe the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.