பொச்சாப்பார்க்கு இல்லை புகழ்மை – குறள்: 533

Thiruvalluvar

பொச்சாப்பார்க்கு இல்லை புகழ்மை அதுஉலகத்து
எப்பால் நூலோர்க்கும் துணிவு.
– குறள்: 533

– அதிகாரம்: பொச்சாவாமை, பால்: பொருள்



கலைஞர் உரை

மறதி உடையவர்களுக்கு, மங்காப் புகழ் இல்லை என்பதே அனைத்தும் கற்றுணர்ந்த அறிஞர்களின் முடிவான கருத்தாகும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

கடமை மறந்தொழுகுவார்க்குப் புகழுடைமையில்லை ; அவ்வின்மைக்கருத்து அறநூலார்க்கு மட்டு மன்றி உலகத்திலுள்ள எவ்வகை நூலார்க்கும் ஒப்ப முடிந்த முடிபாம்.



மு. வரதராசனார் உரை

மறதியால் சோர்ந்து நடப்பவர்க்குப் புகழுடன் வாழும் தன்மையில்லை; அஃது உலகத்தில் எப்படிப்பட்ட நூலோர்க்கும் ஒப்பமுடிந்த முடிபாகும்.



G.U. Pope’s Translation

‘To self-oblivious men no praise’; this rule
Decisive wisdom sums of every school.

 – Thirukkural: 533, Unforgetfulness, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.