அச்சம் உடையார்க்கு அரண்இல்லை – குறள்: 534

Thiruvalluvar

அச்சம் உடையார்க்கு அரண்இல்லை ஆங்குஇல்லை,
பொச்சாப்பு உடையார்க்கு நன்கு.
– குறள்: 534

– அதிகாரம்: பொச்சாவாமை, பால்: பொருள்கலைஞர் உரை

பயத்தினால் நடுங்குகிறவர்களுக்குத் தம்மைச் சுற்றிப் பாதுகாப்புக்கான அரண் கட்டப்பட்டிருந்தாலும் எந்தப் பயனுமில்லை. அதைப் போலவே என்னதான் உயர்ந்த நிலையில் இருந்தாலும் மறதி உடையவர்களுக்கு அந்த நிலையினால் எந்தப் பயனுமில்லை.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

உள்ளத்தில் அச்சமுடையவர்க்கு மதில் காடு மலை முதலிய அரண்களிருப்பினும் அவற்றாற் பயனில்லை ;அதுபோல ; மறவியுடையார்க்குப் படை செல்வம் முதலிய நலங்களிருந்தும் அவற்றாற் பயனில்லை.மு. வரதராசனார் உரை

உள்ளத்தில் அச்சம் உடையவர்க்குப் புறத்திலே அரண் இருந்தும் பயன் இல்லை; அதுபோல் மறதி உடையவர்க்கு நல்ல நிலை வாய்த்தும் பயன் இல்லை.G.U. Pope’s Translation

‘To cowards is no fort’s defence’; e’en so
The self-oblivious men no blessing know.

 – Thirukkural: 534, Unforgetfulness, WealthBe the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.