பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் – குறள்: 657

Thiruvalluvar

பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்
கழிநல் குரவே தலை.
– குறள்: 657

– அதிகாரம்: வினைத்தூய்மை, பால்: பொருள்கலைஞர் உரை

பழிக்கு அஞ்சாமல் இழிவான செயல்களைப் புரிந்து செல்வந்தராக வாழ்வதைவிட, கொடிய வறுமை தாக்கினாலும் கவலைப்படாமல் நேர்மையாளராக வாழ்வதே மேலானதாகும்.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

அறிவிலாதார் தீவினைகளைச் செய்து அவற்றாற் பழியைத் தம் தலைமேல் ஏற்றுக் கொண்டு பெற்ற செல்வத்தைவிட; அப்பழியை மேற்கொள்ளாத அறிவுடையோரின் கடுவறுமையே சிறந்ததாம்.மு. வரதராசனார் உரை

பழியை மேற்கொண்டு இழிதொழில் செய்து பெறும் செல்வத்தைவிடச் சான்றோர் வினைத்தூய்மை யோடிருந்து பெறும் பொல்லாத வறுமையே சிறந்தது.G.U. Pope’s Translation

Than store of wealth guilt-laden souls obtain, The sorest poverty of perfect soul is richer gain.

 – Thirukkural: 657, Purity in Action, WealthBe the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.