பழையம் எனக்கருதி பண்புஅல்ல – குறள்: 700

Thiruvalluvar

பழையம் எனக்கருதி பண்புஅல்ல செய்யும்
கெழுதகைமை கேடு தரும்.
– குறள்: 700

– அதிகாரம்: மன்னரைச் சேர்ந்தொழுகல், பால்: பொருள்



கலைஞர் உரை

நெடுங்காலமாக நெருங்கிப் பழகுகிற காரணத்தினாலேயே தகாத
செயல்களைச் செய்திட உரிமை எடுத்துக்கொள்வது கேடாகவே முடியும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

அரசனொடு இளமையிலிருந்தே யாம் பழகினேம் என்று கருதித் தமக்குத் தகாதவற்றைச் செய்யும் தவறான நட்புரிமை; அமைச்சர் முதலியோர்க்கு அழிவைத்தரும்.



மு. வரதராசனார் உரை

`யாம் அரசர்க்குப் பழைமையானவராய் உள்ளோம் எனக் கருதித் தகுதி அல்லாதவற்றைச் செய்யும் உரிமை கேட்டைத் தரும்.



G.U. Pope’s Translation

Who think’ We’re ancient friends, ‘ and do unseemly things; To these familiarity sure ruin brings.

 – Thirukkural: 700, Conduct in Persence of the King, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.