அகடுஆரார் அல்லல் உழப்பர்சூது – குறள்: 936

Thiruvalluvar

அகடுஆரார் அல்லல் உழப்பர்சூது என்னும்
முகடியான் மூடப்பட் டார்.
குறள்: 936

– அதிகாரம்: சூது, பால்: பொருள்.



கலைஞர் உரை

சூது எனப்படும் தீமையின் வலையில் விழுந்தவர்கள் வயிறார
உண்ணவும் விரும்பாமல் துன்பத்திலும் உழன்று வருந்துவார்கள்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

சூதாட்டு என்னும் மூதேவியால் ஆட்கொள்ளப்பட்டவர்; இம்மையில் வயிறார உண்ணப்பெறார்;மறுமையில் நரகத்துன்பத்தால் வருந்துவர்.



மு. வரதராசனார் உரை

சூது என்று சொல்லப்படும் மூதேவியால் விழுங்கப் பட்டவர், வயிறு நிறைய உணவும் உண்ணாதவராகிப் பல துன்பப்பட்டு வருந்துவார்.



G.U. Pope’s Translation

Gambling’s Misfortune’s other name: o’er whom she casts her veil,
They suffer grievous want, and sorrows sore bewail.

Thirukkural: 936, Gambling, Wealth.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.