பருகுவார் போலினும் பண்புஇலார் – குறள்: 811

Thiruvalluvar

பருகுவார் போலினும் பண்புஇலார் கேண்மை
பெருகலின் குன்றல் இனிது.
– குறள்: 811

– அதிகாரம்: தீ நட்பு, பால்: பொருள்



கலைஞர் உரை

நல்ல பண்பு இல்லாதவர்கள் அன்பு வெள்ளத்தில் நம்மை
மூழ்கடிப்பதுபோல் தோன்றினாலும் அவர்களது நட்பை, மேலும் வளர்த்துக் கொள்ளாமல் குறைத்துக் கொள்வதே நல்லது.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

காதல் மிகுதியால் விழுங்கி விடுவார்போல் தோன்றினும், நற்குணமில்லார் நட்பு; வளர்தலினுத் தேய்ந்து போதல் நல்லது



மு. வரதராசனார் உரை

அன்பு மிகுதியால் பருகுவார்போல் தோன்றினாலும் நற்பண்பு இல்லாதவரின் நட்பு, வளர்ந்து பெருகுவதைவிடத் தேய்ந்து குறைவது நல்லது.



G.U. Pope’s Translation

Though evil men should all-absorbing friendship show, Their love had better die away than grow.

Thirukkural: 811, Evil Friendship, Wealth

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.