பல்லார் முனியப் பயன்இல – குறள்: 191

Thiruvalluvar

பல்லார் முனியப் பயன்இல சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்.
குறள்: 191

– அதிகாரம்: பயனில சொல்லாமை, பால்: அறம்கலைஞர் உரை

பலரும் வெறுக்கும்படியான பயனற்ற சொற்களைப் பேசுபவரை எல்லோரும் இகழ்ந்துரைப்பார்கள்.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

அறிவுடையார் பலரும் வெறுக்குமாறு வீண் சொற்களைச் சொல்பவன்; எல்லாராலும் இழிவாய் எண்ணப்படுவான்.மு. வரதராசனார் உரை

கேட்டவர் பலரும் வெறுக்கும்படியாகப் பயனில்லாத சொற்களைச் சொல்லுகின்றவன், எல்லோராலும் இகழப்படுவான்.G.U. Pope’s Translation

Words without sense, while chafe the wise,
Who babbles, him will all despise.

 – Thirukkural: 191, Not Speaking Profitless Words, Virtues

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.