சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் – குறள்: 267

Thiruvalluvar

சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு. – குறள்: 267

– அதிகாரம்: தவம், பால்: அறம்



கலைஞர் உரை

தம்மைத் தாமே வருத்திக் கொண்டு ஒரு குறிக்கோளுக்காக நோன்பு நோற்பவர்களை எந்தத் துன்பங்கள் தாக்கினாலும் அவர்கள் சுடச்சுட ஒளிவிடும் பொன்னைப் போல் புகழ் பெற்றே உயர்வார்கள்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

உருக்கப்படும் பொன் தீத் தன்னைச் சுடச்சுடத் தன் மாசு மறு நீங்கி ஒளி மிகுவது போல; தவஞ் செய்ய வல்லவர்க்குஅதனால் வருந்துன்பம் தம்மை வருத்த வருத்தத் தம் தீவினைத் தன்மையும் நீங்கித் தெள்ளறிவு மிகும்.



மு. வரதராசனார் உரை

புடமிட்டுச் சுடச்சுட ஒளிவிடுகின்ற பொன்னைப் போல், தவம் செய்கின்றவரைத் துன்பம் வருத்த வருத்த மெய்யுணர்வு மிகும்.



G.U. Pope’s Translation

The hotter glows the fining fire, the gold the brighter shines; The pain of penitence, like fire, the soul of man refines.

 – Thirukkural: 267, Penance, Virtues



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.