ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் – குறள்: 156

ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம்

ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றும் துணையும் புகழ்.
– குறள்: 156

– அதிகாரம்: பொறை உடைமை, பால்: அறம்கலைஞர் உரை

தமக்குக் கேடு செய்தவரை மன்னித்திடாமல் தண்டிப்பவர்க்கு அந்த
ஒருநாள் மட்டுமே இன்பமாக அமையும். மறப்போம் மன்னிப்போம் எனப்பொறுமை கடைப் பிடிப்போருக்கோ, வாழ்நாள் முழுதும் புகழ்மிக்கதாக அமையும்.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

தமக்குத் தீங்கு செய்தவனைத் தண்டித்தார்க்கு உண்டாவது அவ்வொருநாளை யின்பமே; ஆனால், அத்தீங்கைப் பொறுத்தார்க்கோ உலகம் அழியும்வரையும் புகழுண்டாம்.மு. வரதராசனார் உரை

தீங்கு செய்தவரைப் பொறுக்காமல் வருத்தினவர்க்கு ஒருநாள் இன்பமே; பொறுத்தவர்க்கு உலகம் அழியும் வரைக்கும் புகழ் உண்டு.G.U. Pope’s Translation

Who wreak their wrath have pleasure for a day;
Who bear have praise till earth shall pass away.

 – Thirukkural: 156, The Possession of Patience, Forbearance, Virtues

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.