அழுக்கற்று அகன்றாரும் இல்லை குறள்: 170

Thiruvalluvar

அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார்
பெருக்கத்தின் தீர்ந்தாரும் இல். – குறள்: 170

– அதிகாரம்: அழுக்காறாமை, பால்: அறம்



கலைஞர் உரை

கலைஞர் உரை பொறாமை கொண்டதால் புகழ் பெற்றுஉயர்ந்தோரும் இல்லை; பொறாமை இல்லாத காரணத்தால் புகழ் மங்கி வீழந்தோரும் இல்லை.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

பொறாமைப் பட்டுப் பெரியவராயினாருமில்லை; அக்குணமில்லாதவர் பேராக்கத்தினின்று நீங்கினாருமில்லை.



மு. வரதராசனார் உரை

பொறாமைப்பட்டுப் பெருமையுற்றவரும் உலகத்தில் இல்லை; பொறாமை இல்லாதவராய் மேம்பாட்டிலிருந்து நீங்கியவரும் இல்லை.



G.U. Pope’s Translation

No envious men to large and full felicity attain;
No men from envy free have failed a sure increase to gain.

 – Thirukkural: 170, Not envying, Virtues

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.