இலன்என்னும் எவ்வம் உரையாமை – குறள்: 223

Thiruvalluvar

இலன்என்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலன்உடையான் கண்ணே உள.

– குறள்: 223

– அதிகாரம்: ஈகை, பால்: அறம்



கலைஞர் உரை

தமக்குள்ள வறுமைத் துன்பத்தைக் காட்டிக்கொள்ளாமல் பிறருக்கு
ஈவது உயர்ந்த குடிப்பிறந்தவரின் பண்பாகும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

யான் ஏழையென்று இரப்போன் சொல்லும் இழிவுரையைத் தான் பிறனிடத்துச் சொல்லாமையும்; அவ் விரப்போன் வேண்டியதொன்றை இல்லையென்னாது அவனுக்கு ஈதலும்; ஆகிய இரண்டும் உயர்குடிப் பிறந்தான் கண்ணே உள்ளன.



மு. வரதராசனார் உரை

`யான் வறியவன்’ என்னும் துன்பச் சொல்லை ஒருவன் உரைப்பதற்கு முன் அவனுக்கு கொடுக்கும் தன்மை, நல்ல குடிப்பிறப்பு உடையவனிடம் உண்டு.



G.U. Pope’s Translation

‘I’ ve nought’ is ne’er the high – born man’s reply;
He gives to those who raise themselves that cry.

 – Thirukkural: 223, Giving, Virtues



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.