கூற்றம் குதித்தலும் கைகூடும் – குறள்: 269

Thiruvalluvar

கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்கு. – குறள்: 269

– அதிகாரம்: தவம், பால்: அறம்கலைஞர் உரை

எத்தனைத் துன்பங்கள் வரினும் தாங்கிக் குறிக்கோளில் உறுதியாக
நிற்கும் ஆற்றலுடையவர்கள் சாவையும் வென்று வாழ்வார்கள்.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

தவத்தால் வரும் ஆற்றலைப் பெற்றவர்க்கு; கூற்றுவனை வெல்வதுங் கூடுவதாம்.மு. வரதராசனார் உரை

தவம் செய்வதால் பெறத்தக்க ஆற்றலைப் பெற்றவர்க்கு (ஓர் இடையூறும் இல்லையாகையால்) யமனை வெல்லுதலும் கைகூடும்.G.U. Pope’s Translation

Even over death the victory he may gain,
If power by penance won his soul obtain.

 – Thirukkural: 269, Penance, VirtuesBe the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.