குறித்தது கூறாமைக் கொள்வாரொடு – குறள்: 704

Thiruvalluvar

குறித்தது கூறாமைக் கொள்வாரொடு ஏனை
உறுப்பு ஓரனையரால் வேறு.
– குறள்: 704

– அதிகாரம்: குறிப்பு அறிதல், பால்: பொருள்



கலைஞர் உரை

உறுப்புகளால் வேறுபடாத தோற்றமுடையவராக இருப்பினும், ஒருவர் மனத்தில் உள்ளதை, அவர் கூறாமலே உணரக்கூடியவரும், உணர முடியாதவரும் அறிவினால் வேறுபட்டவர்களேயாவார்கள்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

ஒருவர் தம் மனத்திற் கருதியதை அவர் கூறாமலே அறியவல்லவரோடு; மற்றவர் உறுப்பான் ஒரு தன்மையராக ஒப்பாரேனும்; மதித்திறனாலும் அறிவாலும் வேறுபட்டவராவர்.



மு. வரதராசனார் உரை

ஒருவன் மனத்தில் கருதியதை அவன் கூறாமலே அறிந்து கொள்ள வல்லவரோடு மற்றவர் உறுப்பால் ஒத்தவராக இருந்தாலும் அறிவால் வேறுபட்டவர் ஆவர்.



G.U. Pope’s Translation

Who reads what’s shown by signs, thought words unspoken be,
In form may seem as other men, in function nobler far is he.

 – Thirukkural: 704, The Knowledge of Indication, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.