உண்ணாமை வேண்டும் புலாஅல் – குறள்: 257

Thiruvalluvar

உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதுஒன்றன்
புண்அது உணர்வார்ப் பெறின்.

– குறள்: 257

– அதிகாரம்: புலால் மறுத்தல், பால்: அறம்



கலைஞர் உரை

புலால் என்பது வேறோர் உயிரின் உடற்புண் என்பதை உணர்ந்தோர்
அதனை உண்ணாமல் இருக்க வேண்டும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

புலால் என்பது வேறோர் உடம்பின் புண்ணே; அவ்வுண்மையை அறியப் பெறின் அதை உண்ணாதிருத்தல் வேண்டும்.



மு. வரதராசனார் உரை

புலால் உண்ணாமலிருக்க வேண்டும்; ஆராய்ந்து அறிவாரைப் பெற்றால், அப்புலால் வேறோர் உயிரின் புண் என்பதை உணரலாம்.



G.U. Pope’s Translation

With other beings’ ulcerous wounds their hunger they appease; If this they felt, desire to eat must surely cease.

 – Thirukkural: 257, The Renunciation of Flesh, Virtues



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.