தன்உயிர் தான்அறப் பெற்றானை – குறள்: 268

Thiruvalluvar

தன்உயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
மன்உயிர் எல்லாம் தொழும். – குறள்: 268

– அதிகாரம்: தவம், பால்: அறம்கலைஞர் உரை

“தனது உயிர்” என்கிற பற்றும், “தான்” என்கிற செருக்கும்
கொள்ளாதவர்களை உலகம் புகழ்ந்து பாராட்டும்.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

தன்னுயிரைத் தனக்கு முற்றுரிமையாகப் பெற்றவனை; அங்ஙனம் பெறாத மற்ற மக்களெல்லாம் கைகூப்பி வணங்குவர்.மு. வரதராசனார் உரை

தவவலிமையால் தன்னுடைய உயிர் தான் என்னும் பற்று நீங்கப்பெற்றவனை மற்ற உயிர்கள் எல்லாம் (அவனுடைய பெருமையை உணர்ந்து) தொழும்.G.U. Pope’s Translation

Who gains himself in utter self-control,
Him worships every other living soul.

 – Thirukkural: 268, Penance, VirtuesBe the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.