அற்றாரைத் தேறுதல் ஓம்புக – குறள்: 506

Thiruvalluvar

அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றுஅவர்
பற்றுஇலர் நாணார் பழி.
– குறள்: 506

அதிகாரம்: தெரிந்து தெளிதல், பால்: பொருள்



கலைஞர் உரை

நெறியற்றவர்களை ஒரு பணிக்குத் தேர்வு செய்வது கூடாது. அவர்கள் உலகத்தைப் பற்றிக் கவலைப்படாமல், பழிக்கு நாணாமல் செயல்படுவார்கள்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

மகப்பேறும் உறவினரும் இல்லாதவரை வினைத்தலைவராகத் தெளிதலை விட்டு விடுக ; அவர் அவர் வேறு தொடர்பில்லாத வராதலால் ; பழிக்கு அஞ்சார்.



மு. வரதராசனார் உரை

சுற்றத்தாரின் தொடர்பு அற்றவரை நம்பித் தெளியக் கூடாது; அவர் உலகத்தில் பற்று இல்லாதவராகையால் பழிக்கு நாணமாட்டார்.



G.U. Pope’s Translation

Beware of trusting men who have no kith or kin, No bonds restrain such men, no shame deters from sin.

 – Thirukkural: 506, Selection and Confidence, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.