கருமத்தால் நாணுதல் நாணு – குறள்: 1011

Thiruvalluvar

கருமத்தால் நாணுதல் நாணு திருநுதல்
நல்லவர் நாணுப் பிற.
– குறள்: 1011

– அதிகாரம்: நாணுடைமை, பால்: பொருள்



கலைஞர் உரை

ஒருவர் தமது தகாத நடத்தையின் காரணமாக நாணுவதற்கும், நல்ல
பெண்களுக்கு இயல்பாக ஏற்படும் நாணத்துக்கும் மிகுந்த வேறுபாடு உண்டு.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

நன்மக்கள் நாணுவது தீய வினைகள் செய்ய வெட்கிப் பின் வாங்குதல்; அஃதன்றித் தனித்து வெளிச் செல்லுதல் , அறியாத ஆடவரொடு உரையாடல், ஆடவருள்ள அவையிற் பேசுதல் முதலிய பிறவற்றிற்கு வெட்கப் படுதலும் கூச்சப் படுதலும் , அழகிய நெற்றியையுடைய குலமகளிர்க்கேயுரிய நாண்களாம்.



மு. வரதராசனார் உரை

தகாத செயல் காரணமாக நாணுவதே நாணமாகும்; பெண்களுக்கு இயல்பான மற்ற நாணங்கள் வேறு வகையானவை.



G.U. Pope’s Translation

To shrink abashed from evil deed is ‘generous shame’; Other is that of bright-browed ones of virtuous fame.

 – Thirukkural: 1011, Shame, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.