கருமம் சிதையாமல் கண்ணோட – குறள்: 578

Thiruvalluvar

கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
உரிமை உடைத்துஇவ் உலகு.
– குறள்: 578

– அதிகாரம்: கண்ணோட்டம், பால்: பொருள்கலைஞர் உரை

கடமை தவறாமையிலும், கருணை பொழிவதிலும் முதன்மையாக
இருப்போருக்கு இந்த உலகமே உரிமையுடையதாகும்.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

நடுநிலையாக முறை செய்யவேண்டிய தம் கடமை தவறாமல் கண்ணோட வல்ல அரசர்க்கு ; இவ்வுலகம் நிலையான உரிமையாகுந் தன்மை யுடையதாம்.மு. வரதராசனார் உரை

தம் தம் கடமையாகிய தொழில் கெடாமல் கண்ணோட்டம் உடையவராக இருக்கவல்லவர்க்கு, இவ்வுலகம் உரிமை உடையது.G.U. Pope’s Translation

Who can benignant smile, yet leave no work undone; By them as very own may all the earth be won.

 – Thirukkural: 578, Benignity, WealthBe the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.