இரத்தலின் இன்னாது மன்ற குறள்: 229

Thiruvalluvar

இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல். – குறள்: 229

– அதிகாரம்: ஈகை, பால்: அறம்கலைஞர் உரை

பிறர்க்கு ஈவதால் குறையக் கூடுமென்று, குவித்து வைத்துள்ளதைத்
தாமே உண்ணுவது என்பது கையேந்தி இரந்து நிற்பதைக் காட்டிலும்
கொடுமையானது.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

தாம் ஈட்டக் கருதிய பொருட்குறையை நிரப்பவேண்டி வறியார்க் கொன்றீயாது தாமே தமித்துண்டல்; திண்ணமாக; இரத்திலினும் தீயதாம்.மு. வரதராசனார் உரை

பொருளின் குறைபாட்டை நிரப்புவதற்காக உள்ளதைப் பிறர்க்கு ஈயாமல் தாமே தமியராய் உண்பது வறுமையால் இரப்பதைவிடத் துன்பமானது.G.U. Pope’s Translation

They keep their garners full, for self alone the board they spread;- ‘Tis greater pain, be sure, than begging daily bread!

 – Thirukkural: 229, Giving, VirtuesBe the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.