எனைத்துணையர் ஆயினும் என்னாம் – குறள்: 144

Thiruvalluvar

எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்
தேரான் பிறன்இல் புகல் . – குறள்: 144

– அதிகாரம்: பிறனில் விழையாமை, பால்: அறம்கலைஞர் உரை

பிழை புரிகிறோம் என்பதைத் தினையளவுகூடச் சிந்தித்துப் பாராமல், பிறன் மனைவியிடம் விருப்பம் கொள்வது, எத்துணைப்
பெருமையுடையவரையும் மதிப்பிழக்கச் செய்துவிடும்.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

எத்துணை உயர்ந்தோராயினும் ; தாம் செய்யுந் தீவினையைத் தினையளவும் எண்ணிப்பாராது பிறன் மனைவியை விரும்பி அவன் இல்லத்திற்குட் புகுதல்; என்ன பயனுடைத்தாம்?மு. வரதராசனார் உரை

தினையளவும் ஆராய்ந்து பார்க்காமல் பிறனுடைய மனைவியிடம் செல்லுதல், எவ்வளவு பெருமையை உடையவராயினும் என்னவாக முடியும்?G.U. Pope’s Translation

How great soe’er they be, what gain have they of life, Who, not a whit reflecting, seek a neighbour’s wife.

 – Thirukkural: 144,Not Coveting Another’s Wife, Virtues

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.