எனைத்தும் குறுகுதல் ஓம்பல் – குறள்: 820

Thiruvalluvar

எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ,
மன்றில் பழிப்பார் தொடர்பு.
– குறள்: 820

– அதிகாரம்: தீ நட்பு, பால்: பொருள்



கலைஞர் உரை

தனியாகச் சந்திக்கும் போது இனிமையாகப் பழகி விட்டுப் பொது
மன்றத்தில் பழித்துப் பேசுபவரின் நட்பு, தம்மை அணுகாமல் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

இல்லத்தில் தனியே யிருக்கும்போது அன்பர்போல் நட்பாடி, அம்பலத்திற் பலரோடு கூடியிருக்கும்போது பகைவர்போற் பழிகூறுவார் நட்பு, எள்ளளவுந் தம்மை அணுகாதபடி காத்துக்கொள்க.



மு. வரதராசனார் உரை

தனியே வீட்டில் உள்ளபோது பொருந்தியிருந்து, பலர் கூடிய மன்றத்தில் பழித்துப் பேசுவோரின் நட்பை எவ்வளவு சிறிய அளவிலும் அணுகாமல் விடவேண்டும்.



G.U. Pope’s Translation

In anywise maintain not intercourse with those, Who in the house are friends, in hall are slandering foes.

Thirukkural: 820, Evil Friendship, Wealth

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.