அறிவுஅற்றம் காக்கும் கருவி – குறள்: 421

அறிவுஅற்றம் காக்கும் கருவி

அறிவுஅற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்
உள்அழிக்கல் ஆகா அரண். – குறள்: 421

அதிகாரம்: அறிவுடைமை, பால்: பொருள்கலைஞர் உரை

பகையால் அழிவு வாராமல் பாதுகாக்கும் அரண், அறிவு ஒன்றுதான்.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

நிலவுலகில் வாழ்வார்க்கு, சிறப்பாக ஆள்வார்க்கு, அறிவானது அழிவு வராமற்காக்குங் கருவியாம்; அதுவுமன்றிப் பகைவராலும் அழிக்கமுடியாத உள்ளரணாம்.மு. வரதராசனார் உரை

அறிவு, அழிவு வராமல் காக்கும் கருவியாகும்; அன்றியும் பகைகொண்டு எதிர்ப்பவர்க்கும் அழிக்க முடியாத உள்ளரணும் ஆகும்G.U. Pope’s Translation

True wisdom wards off woes,
A circling fortress high;
Its inner strength man’s eager foes,
Un’shaken will defy.

 – Thirukkural: 421, The Possession of Knowledge, WealthBe the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.