அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகன்அமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின். – குறள்: 92
– அதிகாரம்: இனியவை கூறல், பால்: அறம்
விளக்கம்:
முகம் மலர்ந்து இனிமையாகப் பேசுவது, உள்ளம் மகிழ்ந்து பொருளைக் கொடுக்கும் ஈகைக் குணத்தைவிட விட, மேலான பண்பாகும்.
அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகன்அமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின். – குறள்: 92
விளக்கம்:
முகம் மலர்ந்து இனிமையாகப் பேசுவது, உள்ளம் மகிழ்ந்து பொருளைக் கொடுக்கும் ஈகைக் குணத்தைவிட விட, மேலான பண்பாகும்.
தெளிவு இலதனைத் தொடங்கார் இளிவுஎன்னும்ஏதப்பாடு அஞ்சு பவர். – குறள்: 464 – அதிகாரம்: தெரிந்து செயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை களங்கத்துக்குப் பயப்படக் கூடியவர்கள்தான் விளைவுகளை எண்ணிப் பார்த்து அந்தக் களங்கம் தரும் காரியத்தில் இறங்காமல் இருப்பார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தமக்கு இழிவு [ மேலும் படிக்க …]
தவம்மறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்துவேட்டுவன் புள்சிமிழ்த் தற்று. – குறள்: 274 – அதிகாரம்: கூடா ஒழுக்கம், பால்: அறம் கலைஞர் உரை புதரில் மறைந்து கொண்டு வேடன் பறவைகளைக் கண்ணி வைத்துப் பிடிப்பதற்கும், தவக்கோலத்தில் இருப்பவர்கள் தகாத செயல்களில் ஈடுபடுவதற்கும் வேறுபாடு இல்லை. ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]
ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்ஏனை இரண்டும் ஒருங்கு. – குறள்: 760 – அதிகாரம்: பொருள் செயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை அறம் பொருள் இன்பம் எனும் மூன்றினுள் பொருந்தும் வழியில்பொருளை மிகுதியாக ஈட்டியவர்களுக்கு ஏனைய இரண்டும் ஒன்றாகவே எளிதில் வந்து சேரும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment