ஆபயன் குன்றும் அறுதொழிலோர் – குறள்: 560

Thiruvalluvar

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்.
– குறள்: 560

– அதிகாரம்: கொடுங்கோன்மை, பால்: பொருள்



கலைஞர் உரை

ஓர் அரசு நாட்டை முறைப்படி காக்கத் தவறினால் ஆக்கப்பணிகள்
எதுவும் நடக்காது; முக்கியமான தொழில்களும் தேய்ந்து விடும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

காத்தற்குரிய அரசன் குடிகளையும் அவர்கட்குப் பயன்படும் உயிரிகளையும் காவானாயின் ; அவன் நாட்டு ஆக்களும் பால் குன்றும் ; அறுவகைத் தொழில் செய்வோரும் தத்தமக்குரிய நூல் கற்பதை அல்லது பார்ப்பதை விட்டுவிடுவர்.



மு. வரதராசனார் உரை

நாட்டைக் காக்கும் தலைவன் முறைப்படி காக்காவிட்டால் அந்நாட்டில் பசுக்கள் பால் தருதலாகிய பயன் குன்றும்; அந்தணரும் அறநூல்களை மறப்பர்.



G.U. Pope’s Translation

Where guardian guardeth not, udder of kine grows dry, And Brahmans’ Sacred lore will all forgoten lie.

 – Thirukkural: 560, The Cruel Sceptre, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.