இஸ்ரோ-வில் பள்ளி மாணவர்களுக்கான இளம் அறிவியலாளர் பயிற்சி 2020 (Young Scientist Programme – YUVIKA 2020 at ISRO)

இஸ்ரோ-வில் பள்ளி மாணவர்களுக்கான இளம் அறிவியலாளர் பயிற்சி 2020 (Young Scientist Programme – YUVIKA 2020 at ISRO)

பள்ளிச் சிறார்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு! இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (Indian Space Research Organization – ISRO) ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இலவசமாக இரண்டு வார கோடைப்பயிற்சி (இளம் அறிவியலாளர் பயிற்சி 2020 – Young Scientist Programme 2020 – YUVIKA 2020 at ISRO) அளிக்கிறது.

பள்ளி மாணவர்களுக்கு விண்வெளி அறிவியல் / தொழில்நுட்பம், மற்றும் விண்வெளிப்பயன்பாடுள் ஆகியவற்றை அறிமுகப்படுத்தவும், வளர்ந்து வரும் புதிய விண்வெளி ஆய்வுகளில் அவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தவும், இந்த கோடைப்பயிற்சியை இஸ்ரோ அளிக்கிறது.

இஸ்ரோவின் நான்கு மையங்களில் (பெங்களூரு, திருவனந்தபுரம், அஹமதபாத், ஷில்லாங்க்) நடைபெறவிருக்கும் இந்தப் பயிற்சிக்கு, மாணவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் இஸ்ரோவே அளிக்கிறது. அதாவது, உணவு, தங்கும் வசதி, புத்தகங்கள் மற்றும் படிக்கத்தேவையான பொருட்கள், சென்று வர இரண்டாம் வகுப்பு குளிரூட்டப்பட்ட வசதி கொண்ட பெட்டிக்கான இலவச இரயில் பயணச்சீட்டு, மேலும் உடன் வரும் ஒருவருக்கு அதே வசதி கொண்ட இலவச இரயில் பயணச்சீட்டு ஆகிய அனைத்தையும் பயிற்சியில் பங்கு பெறும் மாணவர்களுக்கு இஸ்ரோ அளிக்கிறது.

கல்வித்தகுதி

ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் (மாநிலக் கல்வித் திட்டம் அல்லது சிபிஎஸ்சி அல்லது ஐசிஎஸ்சி) இந்தக் கோடைப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். மாணவர்களின் 8-ஆம் வகுப்பு மதிப்பெண்கள் மற்றும் அவர்களின் பிற திறமைகள் (Extra Curricular Activities) ஆகியவற்றின் அடிப்படையில் மாணவர்கள் தேந்தெடுக்கப்படுவார்கள். ஒவ்வொரு மாநிலம் / யூனியன் பிரதேசத்திற்கும் மூன்று மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்தியாவில் கல்வி பயிலும் வெளிநாடு வாழ் இந்தியர்களின் (Overseas Citizens of India) குழந்தைகளுக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கிராமப்புற மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

பயிற்சிக்காலம்

இரண்டு வாரங்கள் – மே-11-2020 முதல் மே-22-2020 வரை.

விண்ணப்பிக்க இறுதி நாள்

கோடைப் பயிற்சிக்கு, இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ இணைய தளம் மூலம் விண்ணப்பிக்க இறுதி நாள்: 05-மார்ச்-2020 (மாலை 6.00 மணி வரை).

மேலும் கோடைப்பயிற்சி மற்றும் விண்ணப்பிக்கும் முறைகள் பற்றி தெரிந்து கொள்ள இஸ்ரோவின் கீழ்க்கண்ட அதிகாரப்பூர்வ இணையப்பக்கத்தைச் சொடுக்கிப் பார்க்கவும்:

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.