நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன். – குறள்: 605
– அதிகாரம்: மடி இன்மை, பால்: பொருள்
காலம் தாழ்த்துதல், மறதி, சோம்பல், அளவுக்கு மீறிய தூக்கம் ஆகிய நான்கும், கெடுகின்ற ஒருவர் விரும்பி ஏறும் சிறு படகாகும்.
நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன். – குறள்: 605
தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்துமன்உயிர்க்கு எல்லாம் இனிது. – குறள்: 68 – அதிகாரம்: மக்கட்பேறு, பால்: அறம் கலைஞர் உரை பெற்றோரைக் காட்டிலும் பிள்ளைகள் அறிவிற் சிறந்து விளங்கினால்,அது பெற்றோருக்கு மட்டுமேயன்றி உலகில் வாழும் அனைவருக்கும் அகமகிழ்ச்சி தருவதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தம்மினும் மிகுதியாக [ மேலும் படிக்க …]
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பிஎல்லா உயிரும் தொழும். – குறள்: 260 – அதிகாரம்: புலால் மறுத்தல், பால்: அறம் கலைஞர் உரை புலால் உண்ணாதவர்களையும், அதற்காக உயிர்களைக்கொல்லாதவர்களையும் எல்லா உயிரினங்களும் வணங்கி வாழ்த்தும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஓருயிரையுங் கொல்லாதவனாய்ப் புலாலையும் உண்ணாதவனை; எல்லா மக்களும் [ மேலும் படிக்க …]
இனத்துஆற்றி எண்ணாத வேந்தன் சினத்துஆற்றிச்சீறின் சிறுகும் திரு. – குறள்: 568 – அதிகாரம்: வெருவந்த செய்யாமை, பால்: பொருள் கலைஞர் உரை கூட்டாளிகளிடம் கலந்து பேசாமல் சினத்திற்கு ஆளாகிக் கோணல் வழி நடக்கும் அரசு தானாகவே வீழ்ந்து விடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை செய்ய வேண்டிய [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment