
தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும். – குறள்: 508
– அதிகாரம்: தெரிந்து தெளிதல், பால்: பொருள்
கலைஞர் உரை
ஆராய்ந்து பார்க்காமல் ஒருவரைத் துணையாகத் தேர்வு செய்து,
அமர்த்திக்கொண்டால் அவரால் வருங்காலத் தலைமுறையினர்க்கும் நீங்காத துன்பம் விளையும்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
தன்னொடு தொடர்பற்ற ஒருவனை ஒருவழியாலும் ஆராயாது தெளிந்த அரசனுக்கு ; அத்தெளிவு அவன் வழியினர்க்கும் நீங்காத துன்பத்தைக் கொடுக்கும்.
மு. வரதராசனார் உரை
மற்றவனைப் பற்றி ஒன்றும் ஆராயாமல் தெளிந்தால் அஃது (அவனுக்கு மட்டும் அல்லாமல்) அவனுடைய வழிமுறையில் தோன்றியவர்க்கும் தீராத துன்பத்தைக் கொடுக்கும்.
G.U. Pope’s Translation
Who trusts an untried stranger, brings disgrace, Remediless, on all his race.
– Thirukkural: 508, Selection and Confidence, Wealth

Be the first to comment