நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது. – குறள்: 124
– அதிகாரம்: அடக்கம் உடைமை, பால்: அறம்
தன் நேர்மையான வழியை விட்டு விலகாது, அடக்கத்துடன் வாழ்பவரது உயர்வு, மலையைக் காட்டிலும் மிக உயரமானது.
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது. – குறள்: 124
மழை (இயற்கை) – பாரதிதாசன் கவிதை வானத்தி லேபிறந்த மழையே வா! – இந்தவையத்தை வாழவைக்க மழையே வா!சீனிக்கரும்பு தர மழையே வா! – நல்லசெந்நெல் செழிப்பாக்க மழையே வா!கானல் தணிக்க நல்ல மழையே வா! – நல்லகாடு செழிக்க வைக்க மழையே வா!ஆன கிணறுகுளம் ஏரிஎல்லாம் – [ மேலும் படிக்க …]
அறவினை யாதுஎனின் கொல்லாமை கோறல்பிறவினை எல்லாம் தரும். – குறள்: 321 – அதிகாரம்: கொல்லாமை, பால்: அறம் கலைஞர் உரை எந்த உயிரையும் கொல்லாதிருப்பதே அறச்செயலாகும். கொலைசெய்தல் தீயவினைகள் அனைத்தையும் விளைவிக்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை முழுநிறைவான அறச்செயல் எதுவென்று வினவின், அது ஓருயிரையுங் கொல்லாமையாம்; [ மேலும் படிக்க …]
வகைஅறச் சூழாது எழுதல் பகைவரைப்பாத்திப் படுப்பதுஓர் ஆறு. – குறள்: 465 – அதிகாரம்: தெரிந்து செயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை முன்னேற்பாடுகளை முழுமையாக ஆராய்ந்து செய்யாமல் பகைவரை ஒடுக்க முனைவது அந்தப் பகைவரின் வலிமையை நிலையாக வளர்க்கும் வழியாக ஆகிவிடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark


Be the first to comment