பறக்கும் மீன்கள்! (Flying Fish)

Flying Fish

பறக்கும் மீன்கள் (எக்சோசேட்டடே -Flying Fish – Exocoetidae) பற்றி அறிந்து கொள்வோம்!

மீன்களால் பறக்க முடியுமா? ஆம். எக்சோசேட்டடே (Exocoetidae) எனப்படும் இறக்கைகள் போன்ற துடுப்புகள் கொண்ட ஒரு வகை மீன்கள் (Flying Fish) ஒரு குறிப்பிட்ட தூரம் வரை பறக்கும் திறன் படைத்தவை. இந்த அரிய வகை மீன்களைப் பற்றி இப்போது தெரிந்து கொள்வோம்!

கடலில் வாழும் பிற எதிரிகளிடமிருந்து காத்துக்கொள்ள இறக்கைகள் போன்ற அமைப்புடைய துடுப்புகள், இந்த பறக்கும் மீனுக்கு உதவுகின்றன. டார்பீடோ எனப்படும் கடலில் செலுத்தக் கூடிய ஏவுகணை போன்ற வடிவமைப்புடைய இதன் உடல்வாகு, கடல் மட்டத்தின் மேற்பரப்பைக் கிழித்துக்கொண்டு, இது மேலெழும்ப உதவுகிறது. அவ்வாறு மேலே துள்ளித் தாவும்போது, அதன் வாலால் பலமாக உந்தி இன்னும் மேலெழும்பி, காற்றில் பறந்து செல்லும். வலிமையான காற்று வீசும்போது, இந்த மீன் நூற்றுக்கணக்கான மீட்டர்கள் வரை பறந்து செல்லும் திறன் கொண்டது.

சில நேரங்களில், கடலுக்கடியில் வாழும் எதிரிகளிடமிருந்து தப்பி, கடல் மட்டத்துக்கு மேல் தாவிப் பறந்து செல்லும் போது, இந்த மீன்கள் கடல் வல்லூறுகளிடம் சிக்கி இரையாக நேரிடுகிறது. இவற்றின் பலமே இவற்றுக்கு பலவீனமாகவும் அமைந்துவிடுகிறது! பறக்கும் மீன்கள் பறப்பதைக் காணவேண்டுமா?

இந்த மீன்கள் டொரேடோ (Dorado) மீன்களிடம் இரையாகமல் தப்பித்துக் கொள்ள பாய்ந்து பறந்து செல்வதையும், அவற்றை வேட்டையாட ஃப்ரிகேட் பறவைகள் (Frigate birds) மேலிருந்து தாக்குவதையும், பிபிசி அழகாகப் படம்பிடித்துள்ளது. இந்த அரிய காட்சியைக் கீழேயுள்ள வீடியோவைக் க்ளிக் செய்து பாருங்கள்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.