Kaanaathaan - kural - 849
திருக்குறள்

காணாதான் காட்டுவான் தான்காணான் – குறள்: 849

காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்கண்டானாம் தான்கண்ட வாறு. – குறள்: 849 – அதிகாரம்: புல்லறிவாண்மை, பால்: பொருள் விளக்கம் அறிவற்ற ஒருவன், தான் அறிந்ததை மட்டும் வைத்துக் கொண்டு, தன்னை   அறிவுடையவனாகக் காட்டிக் கொள்வான். அவனை உண்மையிலேயே  அறிவுடையவனாக்க முயற்சி செய்ய நினைக்கும் மற்றொருவன் தன்னையே அறிவற்ற [ மேலும் படிக்க …]

Planning
திருக்குறள்

முடிவும் இடையூறும் – குறள்: 676

முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்படுபயனும் பார்த்துச் செயல். – குறள்: 676 – அதிகாரம்: வினை செயல்வகை, பால்: பொருள் விளக்கம் ஈடுபடக்கூடிய ஒரு செயலால் எதிர்பார்க்கப்படும் பயன், அதற்கான முயற்சிக்கு இடையே வரும் தடைகள், அச்செயலாற்றுவதற்கான முறை ஆகிய அனைத்தையும் முதலில் ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டும்.

Do not Drink Alcohol
திருக்குறள்

ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் – குறள்: – 923

ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்சான்றோர் முகத்துக் களி. – குறள்: 923 – அதிகாரம்: கள் உண்ணாமை, பால்: பொருள் விளக்கம் கள்ளருந்தி மயங்கிடும் தன் மகனை, அவன் குற்றங்களை மன்னிக்கக் கூடிய தாயே காணச் சகிக்கமாட்டாள் என்கிறபோது ஏனைய சான்றோர்கள் அவனை எப்படிச் சகித்துக் கொள்வார்கள்.

Challenge
திருக்குறள்

மடுத்தவாய் எல்லாம் பகடுஅன்னான் – குறள்: 624

மடுத்தவாய் எல்லாம் பகடுஅன்னான் உற்றஇடுக்கண் இடர்ப்பாடு உடைத்து. – குறள்: 624 – அதிகாரம்: இடுக்கண் அழியாமை, பால்: பொருள் விளக்கம் தடைகள் நிறைந்த கரடுமுரடான பாதையில் பெரும் பாரத்தை எருது இழுத்துக் கொண்டு போவது போல, விடா முயற்சியுடன் நாம் செயல்பட்டால் துன்பங்களுக்கு முடிவு ஏற்பட்டு, நமக்கு [ மேலும் படிக்க …]

Hand-Winnowing
திருக்குறள்

பருவத்தோடு ஒட்ட ஒழுகல் – குறள்: 482

பருவத்தோடு ஒட்ட ஒழுகல், திருவினைத்தீராமை ஆர்க்கும் கயிறு.      – குறள் – 482 – அதிகாரம்: காலம் அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை காலம் உணர்ந்து அதற்கேற்பச் செயல்படுதல், அந்த நற்செயலின் வெற்றியை நழுவவிடாமல் கட்டிப்பிணிக்கும் கயிறாக அமையும். மு. வரதராசனார் உரை காலத்தோடுப் [ மேலும் படிக்க …]

Determination
திருக்குறள்

எண்ணிய எண்ணியாங்கு எய்துப – குறள்: 666

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்திண்ணியர் ஆகப் பெறின். – குறள் – 666 – அதிகாரம்: வினைத்திட்பம் , பால்: பொருள் விளக்கம்: எண்ணியதைச்  செயல்படுத்துவதில்  உறுதி உடையவர்களாக இருந்தால் அவர்கள் எண்ணியவாறே வெற்றி பெறுவார்கள்.

numbers-and-letters
திருக்குறள்

எண்என்ப ஏனை எழுத்துஎன்ப – குறள்:392

எண்என்ப ஏனை எழுத்துஎன்ப இவ்விரண்டும் கண்என்ப வாழும் உயிர்க்கு.          – குறள்: 392                                – அதிகாரம்: கல்வி, பால்: பொருள் விளக்கம்: [ மேலும் படிக்க …]

Soil
திருக்குறள்

வெண்மை எனப்படுவது யாதுஎனின் – குறள்: 844

வெண்மை எனப்படுவது யாதுஎனின் ஒண்மைஉடையம்யாம் என்னும் செருக்கு.     – குறள்: 844             – அதிகாரம்: புல்லறிவாண்மை, பால்: பொருள்   கலைஞர் உரை ஒருவன் தன்னைத்தானே அறிவுடையவனாக மதித்துக் கொள்ளும்ஆணவத்திற்குப் பெயர்தான் அறியாமை எனப்படும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

Birds
திருக்குறள்

எண்பதத்தால் எய்தல் எளிதுஎன்ப – குறள்: 991

எண்பதத்தால் எய்தல் எளிதுஎன்ப யார்மாட்டும் பண்புஉடைமை என்னும் வழக்கு.      – குறள்: 991                  – அதிகாரம்: பண்புடைமை, பால்: பொருள் விளக்கம்:  யாராயிருந்தாலும் அவர்களிடத்தில் எளிமையாகப் பழகினால், அதுவே பண்புடைமை என்கிற சிறந்த ஒழுக்கத்தைப் [ மேலும் படிக்க …]

Guide
திருக்குறள்

அறன்அறிந்து மூத்த அறிவுடையார் – குறள்: 441

அறன்அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை திறன்அறிந்து தேர்ந்து கொளல்.      – குறள்: 441 – அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல், பால்: பொருள் விளக்கம்: அறம் உணர்ந்த மூதறிஞர்களின் நட்பைப் பெறும் வகைஅறிந்து, அதனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.