
ஆமணக்கு (காட்டாமணக்கு) – உயிரி எரிபொருள் (Biofuel) – சிறுவர் பாடல்கள் – மின்மினிகள் – ந. உதயநிதி
ஆமணக்கு வளர்த்தேனே
விதைகளதை எடுத்தேனே!
செக்கிலிட்டு ஆட்டியே
எண்ணெய்தனை எடுத்தேனே
எண்ணெய்தனை ஊற்றியே
ஊர்திதனை இயக்கினேனே!
ஆமணக்கு வளர்த்தேனே
விதைகளதை எடுத்தேனே!
செக்கிலிட்டு ஆட்டியே
எண்ணெய்தனை எடுத்தேனே
எண்ணெய்தனை ஊற்றியே
ஊர்திதனை இயக்கினேனே!
விடுமுறை – சிறுவர் பாடல்கள் – மின்மினிகள் – ந. உதயநிதி கடற்கரைக்குச் சென்றேனேகடல்அலையை ரசித்தேனே! கோளரங்கம் சென்றேனேவிண்வெளியை ரசித்தேனே அறிவியல்அருங்காட்சியகம் சென்றேனேசிந்திக்க லானேனே தொல்பொருள்அருங்காட்சியகம் சென்றேனேதொன்மைதனை உணர்ந்தேனே பூங்காவுக்குச் சென்றேனேபூக்கள்எல்லாம் ரசித்தேனே நூலகங்கள் சென்றேனேஅறிவுதனை வளர்த்தேனே!
எங்கள் மொழி – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பாடல் – குழந்தைப் பாடல்கள் எங்கள் மொழி நல்ல மொழி.இனிமையாகப் பேசும் மொழி. அன்னை சொல்லித் தந்த மொழி.அன்பொழுகப் பேசும் மொழி. பள்ளி சென்று கற்ற மொழி.பக்குவமாய்ப் பேசும் மொழி. நண்பர் கூடிப் பழகும் மொழி.நயமுடனே பேசும் மொழி. [ மேலும் படிக்க …]
மரம் ஏறலாம் – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பாடல் – சிறுவர் பகுதி தென்னைமரத்தில் ஏறலாம்.தேங்காயைப் பறிக்கலாம். மாமரத்தில் ஏறலாம்.மாங்காயைப் பறிக்கலாம். புளியமரத்தில் ஏறலாம்.புளியங்காயைப் பறிக்கலாம். நெல்லிமரத்தில் ஏறலாம்.நெல்லிக்காயைப் பறிக்கலாம். வாழைமரத்தில் ஏறினால்,வழுக்கிவழுக்கி விழுகலாம்!
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment