நிறங்கள் அறிவோம்
நீலம்
வானம் – நீல நிறம்
வெண்மை
மல்லிகைப் பூ – வெண்மை நிறம்
கறுப்பு
காகம் – கறுப்பு நிறம்
சிவப்பு
மிளகாய் – சிவப்பு நிறம்
பச்சை
இலைகள் – பச்சை நிறம்
மஞ்சள்
வாழைப்பழம் – மஞ்சள் நிறம்
கல்வி வளர்ச்சி நாள்! – ஜூலை-15 – பெருந்தலைவர் காமராஜர் – குழந்தைகள் பாடல் – எழுதியவர் – ந. திருச்செல்வன் பள்ளிகள் பலதந்த பெருந்தகையே!குழந்தைகளுக்கு உணவளித்த உத்தமனேஉழவுத் தொழில் காக்க அணைகள் பல கட்டிய காவியமே, எளிமையின் எழிலோவியமேவாழ்க உன்புகழ் வான்முட்டும் அளவுக்கு!
தட்டான் – சிறுவர் பாடல்கள் – மின்மினிகள் – உதயநிதி நடராஜன் வட்ட முகத் தட்டான்கொசுப்பிடிக்க வாங்க! மழை மேகம் வருதுசீக்கிரமா வாங்க மலேரியா டெங்குக் காய்ச்சல் கொசுக்கள் பறப்புதுங்க கூட்ட மாக வாங்க கொசுப்புடிச்சுப் போங்க நோய் தடுத்துப் போங்கஎங்க மருத்துவரே நீங்கநன்றிசொல்வோம் நாங்க!
கிழமை – பாரதிதாசன் கவிதை ஞாயிறுதான் ஒன்று-பின் நல்ல திங்கள் இரண்டு வாயிற் செவ்வாய் மூன்று-பின் வந்த புதன் நான்கு தூய்வியாழன் ஐந்து-பின் தோன்றும் வெள்ளி ஆறு சாயும்சனி ஏழு– இதைத் தவறாமற் கூறு.
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment