அற்றம் மறைக்கும் பெருமை – குறள்: 980

Thiruvalluvar

அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
குற்றமே கூறி விடும்.
குறள்: 980

– அதிகாரம்: பெருமை, பால்: பொருள்.



கலைஞர் உரை

பிறருடைய குறைகளை மறைப்பது பெருமைப் பண்பாகும். பிறருடைய குற்றங்களையே கூறிக் கொண்டிருப்பது சிறுமைக் குணமாகும்.

.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

பெருமையுடையார் பிறர் மானச் செய்திகளையே கூறி அவமானச் செய்திகளை மறைத்து விடுவர்; மற்றச் சிறுமை யுடை யாரோ பிறர் குணத்தையெல்லாம் மறைத்துக் குற்றங்களையே கூறிவிடுவர்.



மு. வரதராசனார் உரை

பெருமைப்பண்பு பிறருடைய குறைபாட்டை மறைக்கும்; சிறுமையோ பிறருடைய குற்றத்தையே எடுத்துச் சொல்லிவிடும்.



G.U. Pope’s Translation

Greatness will hide a neighbour’s shame;
Meanness his faults to all the world proclaim.

Thirukkural: 980, Greatness, Wealth.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.