வினைக்குஉரிமை நாடிய பின்றை – குறள்: 518

Thiruvalluvar

வினைக்குஉரிமை நாடிய பின்றை அவனை
அதற்குஉரியன் ஆகச் செயல்.
– குறள்: 518

– அதிகாரம்: தெரிந்து வினையாடல், பால்: பொருள்



கலைஞர் உரை

ஒரு செயலில் ஈடுபடுவதற்கு ஏற்றவனா என்பதை ஆராய்ந்து அறிந்த பிறகே, அவனை அந்தச் செயலில் ஈடுபடுத்த வேண்டும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

அரசன் ஒருவனை ஒருவினை செய்தற்குரியவனாக ஆராய்ந்து துணிந்தபின் ;அவனை அவ்வினைக்கு முழுவுரிமையும் உடையவனாகச் செய்க.



மு. வரதராசனார் உரை

ஒருவன் ஒரு தொழிலைச் செய்வதற்கு உரியவனாக இருப்பதை ஆராய்ந்த பிறகு அவனை அத் தொழிலுக்கு உரியவனாகும்படி உயர்த்தவேண்டும்.



G.U. Pope’s Translation

As each man’s special aptitude is known,
Bid each man make that special work his own.

 – Thirukkural: 518, Selection and Employment, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.