உறுப்புஅமைந்து ஊறுஅஞ்சா வெல்படை – குறள்: 761

Thiruvalluvar

உறுப்புஅமைந்து ஊறுஅஞ்சா வெல்படை வேந்தன்
வெறுக்கையுள் எல்லாம் தலை.
– குறள்: 761

– அதிகாரம்: படைமாட்சி, பால்: பொருள்கலைஞர் உரை

எல்லா வகைகளும் நிறைந்ததாகவும், இடையூறுகளுக்கு அஞ்சாமல்
போரிடக்கூடியதாகவும் உள்ள படை ஓர் அரசின் மிகச் சிறந்த
செல்வமாகும்.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

தேர், யானை,குதிரை, காலாள் ஆகிய நால்வகை யுறுப்புக்களும் பொருந்திப் போரின்கண் புண்படுவதற்கும் சாதற்கும் அஞ்சாது பொருது பகைவரை வெல்லத் தக்க படை; அரசனின் செல்வங்க ளெல்லாவற்றுள்ளுந் தலையாயதாம்.மு. வரதராசனார் உரை

எல்லா உறுப்புக்களும் நிறைந்ததாய் இடையூறுகளுக்கு அஞ்சாததாய் உள்ள வெற்றி தரும் படை அரசனுடைய செல்வங்கள் எல்லாவற்றிலும் சிறந்ததாகும்.G.U. Pope’s Translation

A conquering host, complete in all its limbs, that fears no wound,
Mid treasures of the king is chiefest found.

 – Thirukkural: 761, The Excellence of an Army, WealthBe the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.