
செய்துஏமம் சாரா சிறியவர் புன்கேண்மை
எய்தலின் எய்தாமை நன்று. – குறள்: 815
– அதிகாரம்: தீ நட்பு, பால்: பொருள்
கலைஞர் உரை
கீழ்மக்களின் நட்பு, பாதுகாப்பாக அமையாத தீயதன்மை கொண்டது என்பதால், அவர்களுடன் நட்பு ஏற்படுவதைவிட, ஏற்படாமல் இருப்பதே நலம்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
பாதுகாப்புத் தருமென்று கருதிச் செய்துவைத்தாலும் பாதுகாப்பாகாத கீழோரது தீ நட்பு; பெற்றிருப்பதிலும் பெற்றிராமையே நல்லது.
மு. வரதராசனார் உரை
காவல் செய்து வைத்தாலும் காவல் ஆகாத கீழ்மக்களின் தீய நட்பு, ஒருவனுக்கு ஏற்படுவதைவிட ஏற்படாமலிருப்பதே நன்மையாகும்.
G.U. Pope’s Translation
‘Tis better not to gain than gain the friendship profitless
Of men of little minds, who succour fails when dangers press.
– Thirukkural: 815, Evil Friendship, Wealth

 
		 
		 
		
Be the first to comment