அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா – குறள்: 814

Thiruvalluvar

அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்
தமரின் தனிமை தலை.
– குறள்: 814

– அதிகாரம்: தீ நட்பு, பால்: பொருள்கலைஞர் உரை

போர்க்களத்தில் கீழே தள்ளி விட்டுத் தப்பித்து ஓடிப்போகும்
குதிரையைப் போன்றவர்களின் நட்பைப் பெறுவதைக் காட்டிலும் தனித்து இருப்பது எவ்வளவோ சிறப்புடையதாகும்.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

போர் வரு முன்பெல்லாம் தன்னை எந்நிலைமையிலும் தாங்குவது போன்றிருந்து, அது வந்தபின் போர்க்களத்தில் தன்னைக் கீழே தள்ளிவிட்டு ஓடிப்போகும் பயிற்சியில்லாக் குதிரையை ஒத்தவரின்; நட்போடிருத்தலினுந் தனித்திருத்தல் சிறந்ததாம்.மு. வரதராசனார் உரை

போர் வந்தபோது களத்தில் தள்ளிவிட்டு ஓடும் அறிவில்லாத குதிரை போன்றவரின் உறவைவிட, ஒரு நட்பும் இல்லாமல் தனித்திருத்தலே சிறந்தது.G.U. Pope’s Translation

A steed untrained will leave you in the tug of war; Than friends like that to dwell alone is better far.

Thirukkural: 814, Evil Friendship, Wealth

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.