பிரித்தலும் பேணிக் கொளலும் – குறள்: 633

Thiruvalluvar

பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்
பொருத்தலும் வல்லது அமைச்சு.
– குறள்: 633

– அதிகாரம்: அமைச்சு, பால்: பொருள்



கலைஞர் உரை

அமைச்சருக்குரிய ஆற்றல் என்பது (நாட்டின் நலனுக்காக) பகைவர்க்குத் துணையானவர்களைப் பிரித்தல், நாட்டுக்குத் துணையாக இருப்போரின் நலன் காத்தல், பிரிந்து சென்று பின்னர் திருந்தியவர்களைச் சேர்த்துக் கொளல் எனும் செயல்களில் காணப்படுவதாகும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

போர் வந்தவிடத்துப் பகைவரின் துணைவரை அவரினின்று பிரித்தலும்; தம் துணைவரைத் தம்மினின்று பிரியாவாறு இன்சொல்லாலும் கொடையாலும் பேணிக்கொள்ளுதலும்; முன்பு தம்மினின்றும் தம் துணைவரினின்றும் பிரிந்து போனவரைத்தேவையாயின் திரும்பவும் சேர்த்துக் கொள்ளுதலும்; வல்லவனே அமைச்சனாவான்.



மு. வரதராசனார் உரை

பகைவர்க்குத் துணையானவரைப் பிரித்தலும், தம்மிடம் உள்ளவரைக் காத்தலும், பிரிந்தவரை மீண்டும் சேர்த்துக் கொள்ளலும் வல்லவன் அமைச்சன்.



G.U. Pope’s Translation

A minister is he whose power can foes divide, Attach more firmly friends, of severed ones can heal the breaches wide.

 – Thirukkural: 633, The Officeof Minister of State, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.