பலநல்ல கற்றக் கடைத்தும் – குறள்: 823

Thiruvalluvar

பலநல்ல கற்றக் கடைத்தும் மனம்நல்லர்
ஆகுதல் மாணார்க்கு அரிது.
– குறள்: 823

– அதிகாரம்: கூடா நட்பு, பால்: பொருள்



கலைஞர் உரை

அரிய நூல்கள் பலவற்றைக் கற்றிருந்த போதிலும், பகையுணர்வு
படைத்தோர் மனம் திருந்தி நடப்பதென்பது அரிதான காரியமாகும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

பல நல்லநூல்களைக் கற்றபோதிலும்; சிறவாத பகைவர்க்கு; மனந்திருந்தி உண்மை நண்பராகும் தன்மையில்லை.



மு. வரதராசனார் உரை

பல நல்ல நூல்களைக் கற்றுத் தேர்ந்தபோதிலும், அவற்றின் பயனாக நல்ல மனம் உடையவராகப் பழகுதல், (உள்ளன்பினால்) மாட்சியடையாதவர்க்கு இல்லை.



G.U. Pope’s Translation

To heartfelt goodness men ignoble hardly may attain,
Although abundant stores of goodly lore they gain.

Thirukkural: 823, Unreal Friendship, Wealth

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.