ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் – குறள்: 653


ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை ஆஅதும் என்னு மவர்.

– குறள்: 653

– அதிகாரம்: வினைத்தூய்மை, பால்:பொருள்கலைஞர் உரை

மேன்மேலும் உயர்ந்திட வேண்டுமென விரும்புகின்றவர்கள், தம்முடைய செயல்களால் தமது புகழ் கெடாமல் கவனமாக இருந்திட வேண்டும்.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை

யாம் மேன்மேல் உயர்வேம் என்னும் உயர்வெண்ணங் கொண்டவர், தம் மதிப்புக் கெடுவதற் கேதுவான வினைகளைச் செய்யாது விட்டுவிடுதல் வேண்டும்.மு. வரதராசனார் உரை

மேன்மேலும் உயர்வோம் என்று விரும்பி முயல்கின்றவர் தம்முடைய புகழ் கெடுவதற்குக் காரணமான செயலைச் செய்யாமல் விடவேண்டும்.G.U. Pope’s Translation

Who tell themselves that nobler things shall yet be won, All deeds that dim the light of glory must they shun.

Thirukkural: 653, Purity in Action, Wealth

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.