இன்பம் விழையான் இடும்பை – குறள்: 628

Thiruvalluvar

இன்பம் விழையான் இடும்பை இயல்புஎன்பான்
துன்பம் உறுதல் இலன். – குறள்: 628

– அதிகாரம்: இடுக்கண் அழியாமை, பால்: பொருள்கலைஞர் உரை

இன்பத்தைத் தேடி அலையாமல், துன்பம் வந்தாலும் அதை இயல்பாகக் கருதிக்கொள்பவன் அந்தத் துன்பத்தினால் துவண்டு போவதில்லை.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

இன்பத்தைச் சிறப்பாக விரும்பாது; இவ்வுலக வாழ்விலும் வினை முயற்சியிலும் துன்பம் நேர்வது இயல்பென்று தெளிந்திருப்பவன்; துன்பம் வந்தவிடத்துத் துன்பமுறுத லில்லை.மு. வரதராசனார் உரை

இன்பமானதை விரும்பாதவனாய்த் துன்பம் இயற்கையானது என்று தெளிந்திருப்பவன் துன்பம் வந்தபோது துன்ப முறுவது இல்லை.G.U. Pope’s Translation

He seeks not joy, to sorrow man is boorn, he knows; Such man will walk unharmed by touch of human woes.

 – Thirukkural: 628, Hopefulness in Trouble, WealthBe the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.