நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி – குறள்: 995

Thiruvalluvar

நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி பகையுள்ளும்
பண்புஉள பாடுஅறிவார் மாட்டு.
– குறள்: 995

– அதிகாரம்: பண்புடைமை, பால்: பொருள்கலைஞர் உரை

விளையாட்டாகக்கூட ஒருவரை இகழ்ந்து பேசுவதால் கேடு உண்டாகும். அறிவு முதிர்ந்தவர்கள், பகைவரிடமும் பண்புகெடாமல் நடந்து கொள்வார்கள்.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

விளையாட்டாகவேனும் ஒருவரைப் பற்றிப் பழித்தல் அவருக்குத் துன்பந்தருவதாம்; ஆதலாற் பாடறிந்தொழுகுவாரிடத்திற் பகைமையுள்ள போதும் இனிய பண்புகளே உண்டாவன.மு. வரதராசனார் உரை

ஒருவனை இகழ்ந்து பேசுதல் விளையாட்டிலும் துன்பம் தருவதாகும்; பிறருடைய இயல்பை அறிந்து நடப்பவரிடத்தில் பகைமையிலும் நல்ல பண்புகள் உள்ளன.G.U. Pope’s Translation

Contempt is evil though in sport. They sho man’s nature know,
E’en in their warth, a courteous mind will show.

 – Thirukkural: 995, Perfectness, WealthBe the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.