எவ்வது உறைவது உலகம் உலகத்தொடு – குறள்: 426

Thiruvalluvar

எவ்வது உறைவது உலகம் உலகத்தொடு
அவ்வது உறைவது அறிவு. – குறள்: 426

அதிகாரம்: அறிவு உடைமை, பால்: பொருள்கலைஞர் உரை

உயர்ந்தோர் வழியில் உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ
அதற்கேற்ப நடந்து கொள்வதே அறிவாகும்.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

உயர்ந்தோர் எவ்வாறு ஒழுகுகின்றாரோ; அவ்வாறே அவரொடு பொருந்தியொழுகுதல் அறிவுடைமையாம்.மு. வரதராசனார் உரை

உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ, உலகத்தோடு பொருந்திய வகையில் தானும் அவ்வாறு நடப்பதே அறிவாகும்.G.U. Pope’s Translation

As dwells the world, so with the world to dwell
In harmony – this is to wisely live and well.

 – Thirukkural: 426, The Possession of Knowledge , WealthBe the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.