கரப்புஇலார் வையகத்து உண்மையான் – குறள்: 1055

Thiruvalluvar

கரப்புஇலார் வையகத்து உண்மையான் கண்நின்று
இரப்பவர் மேற்கொள் வது. – குறள்: 1055

– அதிகாரம்: இரவு, பால்: பொருள்



கலைஞர் உரை

உள்ளதை இல்லையென்று மறைக்காமல் வழங்கிடும் பண்புடையோர் உலகில் இருப்பதால்தான் இல்லாதவர்கள், அவர்களிடம் சென்று இரத்தலை மேற்கொண்டுள்ளனர்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

வாய் திறந்து இளிவந்த சொல்லைச் சொல்லமாட்டாது ஒருவருக்கு முன் நிற்கும் நிலையினாலேயே இரக்கும் மானியர், தம் உயிரோம்பும் பொருட்டு இரத்தலை மேற்கொள்வது; தம்மிடத்துள்ள பொருளைக் கரவாது ஈயும் ஒருசிலர் உலகத்து இருப்பதனாலேயே.



மு. வரதராசனார் உரை

ஒருவர்முன் நின்று இரப்பவர் அந்த இரத்தலை மேற்கொள்வது, உள்ளதை இல்லை என்று, ஒளித்துக் கூறாத நன்மக்கள் உலகத்தில் இருப்பதால்தான்.



G.U. Pope’s Translation

Because on earth the men exist, who never say them nay, Men bear to stand before their eyes for help to pray.

 – Thirukkural: 1055, Mendicancy, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.