கைஅறியாமை உடைத்தே பொருள்கொடுத்து – குறள்: 925

Thiruvalluvar

கைஅறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து
மெய்அறி யாமை கொளல்.
குறள்: 925

– அதிகாரம்: கள் உண்ணாமைர், பால்: பொருள்.கலைஞர் உரை

ஒருவன் தன்னிலை மறந்து மயங்கியிருப்பதற்காகப், போதைப்
பொருளை விலை கொடுத்து வாங்குதல் விவரிக்கவே முடியாத
மூடத்தனமாகும்.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

ஒருவன் விலைப்பொருள் கொடுத்துக்கள்ளால் வரும் மெய்ம்மறதியை வாங்குதல்; செய்யும் முறைமையறியாமையைக் கரணியமாக வுடையதே.மு. வரதராசனார் உரை

விலைப்பொருள் கொடுத்துக் கள்ளுண்டு தன் உடம்பைத் தான் அறியாத நிலையை மேற்கொள்ளுதல், செய்வது இன்னதென்று அறியாத அறியாமை உடையதாகும்..G.U. Pope’s Translation

With gift of goods who self-oblivion buys,
Is ignorant of all that man should prize.

Thirukkural: 925, Not Drinking Palm – Wine, Wealth.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.